வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஊடகவியாலளர் பிரகீத் எக்னலிகொட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை


தமது கணவரை கண்டுபிடிப்பது தொடர்பில், அரசாங்கத்தினதோ, பொலிஸாரினதோ உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக, ஊடகவியாலளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலத்துக்கும் அதிகமாக அவர் காணாமல் போன நிலையிலும், இது தொடர்பில் அரசாங்கமோ, பொலிஸாரோ எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய போதும், அதற்கான பதில் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவர் தொடர்பான ஒருவார்த்தை தகவல் கூட தெரியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட, அரசாங்கத்துக்கு எதிரான லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் அரசியல் ஆய்வு கட்டுரைகளையும், உயிரோவியங்களையும் வரைந்துவந்தவர்.

அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முதலிருந்து காணாமல் போயிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.

அவர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான அரசியல் கட்டுரைகளையும் எழுதி வந்ததாக கூறப்படுகிறது.

அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்ற ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் சாதாரணமாக இலங்கையில் நடைபெற்றுவருகிறது.

இதேவேளை கொழும்பு ஜெயவர்த்தனபுர நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஏரியில் நேற்று று புதன்கிழமை சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’