வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 பிப்ரவரி, 2010

இந்தோனேசிய அகதி முகாமில் இலங்கையர் உண்ணாவிரதம்


இந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் முறையான மீள் குடியேற்றக் கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறியவர்களுக்கு பல்வேறு நாடுகளில் குடியேற அனுமதி வழங்கப்பட்டதை போல, தமக்கும் தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் டன்ஜுன் பினாங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 இலங்கையர்களும், 8 ஆப்கானிஸ்தானியர்களும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இதற்கிடையில் குறித்த 10 இலங்கையர்களும் நேர்மையான அகதிகள் என உறுதி செய்யப்பட்டதன் பின்னரும், சுமார் ஒரு வருட காலமாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’