
நாட்டில் சரியான நிலைமை ஏற்படும் வரை அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அவசரகாலச் சட்டம் 87 மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டது. அவசரகாலச் சட்டப் பிரேரணையின் பின்னர் உரையாற்றியபே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதற்கான திகதியை உரிய நேரத்தில் நாம் அறிவிப்போம். நாட்டில் சரியான நிலைமை ஏற்படும் வரை அவசரசாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
வடக்கில் கண்ணிவெடிகளை முற்றாக அகற்றுவதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். அவை முழுமையாக அகற்றப்படாததால் மீள்குடியேற்றத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது" என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்ததுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’