-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஓரிரு தினங்களில் வழக்குத் தாக்கல்: ஐ.தே.மு
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தாம் முற்றாக பகிஷ்கரிப்பதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவத்துள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இத் தகவலை உறுதிப்படுத்தினர்.
இவ்விடயம் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை நாம் நியமித்துள்ளோம். உரிய முறையில் தகவல்களை திரட்டி, ஆதாரத்துடன் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துவருகிறார்கள். இன்னும் சில தினங்களில் வழக்கு தொடரலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
அதேவேளை, இரத்தினபுரியில் வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்கு தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்றுள்ளதாக திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’