வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நபருக்கு அபராத தண்டனை?


தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவின் பிரபல ஆட்கடத்தல்காரரான கப்டன் பிரேம் என அழைக்கப்படும், ஆப்ரஹாம் லோயெனபெசி அபராதத்துடன் விடுதலை பெறும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் இலங்கையில் இருந்து 254 பேரை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியது தொடர்பில் அண்மையில் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

எனினும் அவர் மீது, சட்டவிரோதமாக இந்தோனேசிய எல்லைக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டே வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலியான ஆவணங்களுடன் கைதான படகின் மாலுமிகளுக்கும், அதில் இருந்த இலங்கை அகதிகளுக்கும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த படகு கடத்தல் சம்பவத்தின் முக்கிய நபரான கப்டன் பிரேம், சிறிய அபராதத்துடன் வெளியில் செல்ல அனுமதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தை செலுத்த தவறினால், அவர் சிறையில் வைக்கப்படலாம் எனினும், அது நீதிபதியின் கைகளில் இருப்பதாக மற்றுமொரு பிரபல ஆட்கடத்தல் காரரான பிரான்சிஸ்கஸ் பக்பஹான் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் த ஹேரல்ட் நாளிதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஆட்கடத்திலில் ஈடுபட்டுள்ளார், இதுவரையில் 1500க்கும் அதிகமான அகதிகளை அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியுள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் அவர் 254 இலங்கையர்களை கடத்திய போது, அவர்கள் 12,000 டொலர்களை கப்டன் பிரேமுக்கு வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அவருக்கு விதிக்கப்படவுள்ள அபராதத் தொகையை செலுத்த முடியாத நிலை அவருக்கு காணப்படாது எனவும் பிரான்சிஸ்கஸ் பக்பஹான் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’