-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
சனி, 27 பிப்ரவரி, 2010
ராஜிவ் கொலை வழக்கு மே வரை ஒத்திவைப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு நேற்று சென்னை நீதிமன்றில் எதிர்வரும் மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த பொட்டு அம்மான் உட்பட பலர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவர்கள் 2 பேரும் தலைமறைவானதை அடுத்து, இவர்கள் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை முதலாவது தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள், வக்கீல் ஆகியோர் நீதிபதி பி.ராமலிங்கத்திடம் இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி எதிர்வரும் மே மாதம் வரை ஒத்திவைத்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’