வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கோடன் வைஸின் தகவல் அவருடைய தனிப்பட்ட கருத்து என ஐ.நா. சபை தெரிவிப்பு


ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ், இறுதி யுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்த தகவல், அவரது தனிப்பட்ட தகவல் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளினால், மாத்திரமே வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

தம்மால் உள்ளக தகவல்களை மாத்திரமே பெற முடிந்ததாக குறிப்பிட்டுள்ள கோடன் வைஸ், சுதந்திரமாக, தமக்கு தகவல்களை பெறமுடியாமை காரணமாக யுத்த இழப்புக்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடுள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான மற்றும் வதிவிட இணைப்பதிகாரி அலுவலகம். தாம் இலங்கை அரசாங்கத்தின் சமாதானமான தீர்வுக்கும் சமூக கட்டுமான பணிகளுக்கும் தொடர்ந்தும் உதவியளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ், தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது 14 வருட சேவையில்
இருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார். அவர் அவுஸ்திரேலிய ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியில், வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்த தகவல், அவரது தனிப்பட்ட கருத்தாகவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’