
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேசத்திற்குள் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றாரை இழந்த மாணவர்களினதும் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக 220 மாணவர்களுக்கு மகேஸ்வரி நிதியத்தினால் பாடசாலை புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைக்கப்பட்டள்ளன)
இதன் முதற்கட்டமாக கடந்த மாதம் 80 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பைகள் வழங்கப்பட்ட நிலையில் இன்றையதினம் தெல்லிப்பளை அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் கிராமிய வலுப்படுத்தலுக்கான அமைப்புகளின் இணையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மகேஸ்வரி நிதியத்தின் செயற்திட்ட இணைப்பாளர் த.றஜீவ் மேலும் 140 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இவ்வைபவத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஈழமக்கள் ஐனநாயக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை (கி.பி) உரையாற்றுகையில் கடந்த காலத்தில் தவறான தலைமைத்துவத்தின் வழிநடத்தல்களினால் அடக்குமுறைகளிற்கு உட்பட்டு எமது தமிழ் இனம் சொல்லெணாத் துயரங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றது ஆனால் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ அல்லது எமது கட்சியின் கொள்கையோ அவ்வாறு காணப்படவில்லை. ஒரு நாட்டிற்குள் ஐக்கியப்பட்ட சமத்துவ உரிமைகளுடன் கௌரவமாக வாழ்வதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுடன் எமது பிரதேச அபிருத்திக்கே முக்கியத்துவம் கொடுப்பதே எமது கொள்கையாக காணப்படுகின்றது என மேலும் தெரிவித்தார்.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’