
மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலருக்கு இன்றையதினம் புளொட் அமைப்பினரால் ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முருங்கனில் உள்ள புளொட் காரியாலயத்தில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
லண்டனிலுள்ள தர்மலிங்கம் நாகராஜா என்பவரால் அன்பளிப்பாக புளொட் அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்த இந்த சைக்கிள்கள் அடம்பனில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களில் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன், வவுனியா நகரசபை உறுப்பினர் குமாரசாமி, முருங்கன் புளொட் அமைப்பாளர் சிவசம்பு, மகளிர் அமைப்பு பொறுப்பாளர் ஜெஸ்மின் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’