-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
சனி, 27 பிப்ரவரி, 2010
ஐ.ம.சு.கூ. - ஐ.தே.க. தேசியப் பட்டியல் நேற்று வெளியீடு
பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தமது தேசியப் பட்டியலில் இடம்பெறுவோரின் பெயர்களை நேற்று வெளியிட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெயர்ப் பட்டியலை அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் தயானந்த திஸாநாயக்கவிடம் கையளித்தார்.
இதன்படி, குறித்தப் பெயர் பட்டியலில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க அமைச்சர்களான டி.எம்.ஜயரத்ன, டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், எம்.எச்.மொஹமட், பேராசிரியர் விஸ்வா வர்ணபால, டியூ. குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, கீதாஞ்ஜன குணவர்தன, எல்லாவல மேதானந்த தேரர் ஆகியோருடன்,
முத்து சிவலிங்கம், ஷண்முகம் ஜகதீஸ்வரன், அச்சல ஜாகொட, எம்.எப்.எம்.முஸம்மில், டப்ளியூ.ஜே.எம்.லொக்குபண்டார, விநாயகமூர்த்தி முரளீதரன், அநுருத்த ரத்வத்தே, ஓமல்பே சோபித்த தேரர், ஜே.ஆர்.பீ.சூரியப்பெரும, ஜே.எம்.ஜே.பிரியந்த பண்டார, பேராசிரியர் ராஜீவ் விஜேசிங்க, லெஸ்லி தேவேந்ர, சந்திரசேகரன் ஷண்முகநாதன், ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கலாநிதி ஹரிச்சந்ர விஜேதுங்க, சரத் கோன்கஹகே, யூ.எல்.ஷாஹுல் ஹமீத் மற்றும் கமலா ரணதுங்க ஆகியோர் அடங்குகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் தனது தேசியப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ருக்மன் சேனாநாயக்க, கே.என்.சொக்சி, இரான் விக்ரமரத்ன ஆகியோருடன்,
திலக் மாரப்பன, ஹர்சத சில்வா, எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜன் ஆகியோர் உள்ளிட்ட 19 பேர் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெயர் பட்டியல் தேர்தல்கள் ஆணையாளர்நாயகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’