வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 பிப்ரவரி, 2010

முன்றாவது ஒரு நாள் இறுதி போட்டி அகமாதாபாத்தில் இன்று


ஆகமதாபாத் இந்தியா தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஆகமதாபாத்தில் நடக்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா இம்முறை "ஹட்ரிக்' வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.

சச்சின், சேவக் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் சாதித்து காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் சர்தார் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

ஏற்கனவே தொடரை வென்று விட்ட நிலையில் சேவக் சச்சின் பிரவீண் குமார் ஆகிய முன்னணி வீரர்களுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு தரப்பட்டுள்ளது. முரளி விஜய் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். இவருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்காமல் என எதிர் பார்க்கப்படுகிறது. அணித்தலைவர் டோனி விராட் கோஹ்லி ரோகிட் சர்மா ரெய்னா ரவீந்திர ஜடேஜா யூசுப்பதான் ஆகியோரும் சிறப்பாக விளையாடுவார்கள் எனவும் எத்ர் பார்க்கப்படுகிறது.

பிரவீண் இல்லாததால் ஆஷிஸ் நெஹ்ராவுடன் சுதீப் தியாகி அல்லது அபிமன்யு மிதுன் களமிறங்கலாம். பந்து வீச்சாளர்களக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் உதவும் அமித் மிஸ்ராக்கும் வாய்ப்பு இருக்கிறது. முதல் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் அதன் பின் குறிப்பிடத்தக்க அளவில் சோபிக்காதது தென்ஆபிரிக்க அணி நிர்வாகத்துக்கு வருத்தமே. தவிர மார்கல் பார்னல் போத்தா ஆகியோரும் ஏமாற்றினர். இதனால் இன்று டிசட்சொபேக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

இந்திய அணியில் முன்னணி வீரர்கள் 7 பேர் இல்லாத நிலையில் தென் ஆபிரிக்க அணி ஆறுதல் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இளம் வீரர்களை கொண்டு சாதிக்க இந்திய கேப்டன் தோனியும் காத்திருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பாக இருக்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’