வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 பிப்ரவரி, 2010

நுவா கட்சித்தலைவர் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தனது ஆதரவாளர்களுடன் சுதந்திரக்கட்சியில் இணைந்தார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் (நுவா) தலைவி அமைச்சர் பேரியல் அஷ்ரப் தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி முன்னிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

இன்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சுமார் 250 ஆதரவாளர்களுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட திருமதி பேரியல் அஷ்ரப் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து சுதந்திரக்கட்சி அங்கத்துவ அட்டையையும் பெற்றுக்கொண்டார். இதேவேளை சம்மாந்துறையைச் சேர்ந்த ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.நவ்ஷாட்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். இந்நிகழ்வின்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன அமைச்சர்களான டி.எம்.ஜெயரட்ண மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோருடன் பெருந்தொகையான கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும் சமூகமளித்திருந்தனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’