இன்று புத்தளத்தை அண்டிய பகுதியான கீரியன்களி பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து சுமார் 18கோடி ரூபா பெறுமதியான 30கிலோ 900கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கல்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர். அவற்றை கல்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் ஏனைய அதிகாரிகளும் பார்வையிடுவதையும் அவை பொதி செய்யப்பட்ட நிலையில் சூட்கேஸ் ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் படங்களில் காணலாம். மேலும் இந்த போதைப்பொருள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இது மேலும் சில இடங்களுக்கு ஏற்றுமதி செய்யவிருந்ததாகவும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளார் குறித்த நபரிடம் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’