வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 பிப்ரவரி, 2010

பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் -புளொட் தலைவர் த.சித்தார்த்தன்..!


பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் அதற்கான முயற்சிகளில் நாம் முழுமையாக ஈடுபடுவோம் என புளொட் தலைவர் முன்னாள் வன்னி எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இத்தேர்தலில் இணைந்து போட்டியிட முடியாது போனது என கூறுவதிலும் பார்க்க எமது கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்தார்கள் என்பதுதான் உண்மையான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளினால் பலவந்தமாக பயிற்சிக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்படவேண்டும். மீள்குடியேற்றம் நடைபெற்று அவர்கள் சுயமாக வாழ்க்கை நடத்த உதவிகள் வழங்கப்படவேண்டும். இம்மூன்றுடன் தமிழ்மக்களுடைய அரசியல்தீர்வு என்பது முக்கியமானது. இந்த விடயத்தில் அனைத்து தமிழ் கட்சிகளுக்குமிடையில் ஒரு ஒற்றுமை வேண்டும் என நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். வன்னி மாவட்ட பொதுத்தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்ட பின்னர் திரு சித்தார்த்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெரிவு செய்யப்படவுள்ள வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசியே ஆகவேண்டும் ஆறு ஆண்டுகளுக்கு அவரே ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு ஏற்படவேண்டும் என நாம் விரும்புபவர்கள். ஒற்றுமைபற்றி நாம் பேசுகின்றோம். எமது தமிழ் கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வுகூட இல்லை. அது ஏற்படவேண்டும். நாங்கள் பல தரப்புக்களாக பிரிந்துள்ளோம்;. தேர்தலுக்கு பின்னாவது தீர்வு விடயத்தில் எமக்கிடையில் கருத்து ஒருமைப்பாடு வரவேண்டும். அதுதான் நியாயமான தீர்வை எட்ட வழிவகுக்கும் எனவும் திரு.சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’