
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கல்லெறிந்து களங்கம் விளைவித்த நபர்களை இனங்காண நீதிமன்றம் வசமுள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து கடந்த 10ஆம் திகதி நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்போது அங்கு வந்த அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கல்லெறிந்து குழப்பம் விளைவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் சம்பா ஜானகி, எதிர்வரும் 25ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அன்றைய சம்பவம் தொடர்பாக ஐந்து ஊடக நிறுவனங்களிடமிருந்து வீடியோ காட்சிகளைப் பெற்றுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’