வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 பிப்ரவரி, 2010

மட்டு. மேயர் சிவகீதாவுக்கு நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது: கருணா


ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்த மட்டக்களப்பு மாநாகசபையின் மேயர் சிவகீதா பிரபாகரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என தேசநிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு தப்பிச்சென்ற முன்னாள் தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடுதிரும்பி எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் கணேசமூர்த்தி, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆர்.மௌனகுருசாமி ஆகியோர் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளதாக தேசநிர்மாண முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்விருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

மட்டக்களப்பு பட்டிருப்பு பகுதியில் சிறந்த மக்கள் ஆதரவைக் கொண்டுள்ள கணேசமூர்த்தி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்.

எவ்வாறெனினும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்த மட்டக்களப்பு மாநாகசபையின் மேயர் சிவகீதா பிரபாகரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது.

இதேவேளை, முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’