-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
கோப்பாயில் ஈ.பி.டி.பி.யின் புதிய அரசியல் காரியாலயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது!
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் போது மக்கள் பசி பட்டினியால் வாடிய போது அந்த மக்களின் பசியைப் போக்குவதற்காக உணவுப் பொருட்களைப் பெற்;றுத் தந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தான் என கோப்பாயில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய காரியாலயத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்திய வலிகாமம் கிழக்கு தென்பகுதி ப.கூ.சங்கத் தலைவர் என்.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
இன்று (28) மாலை நடைபெற்ற இவ் விழாவில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய என். சுந்தரலிங்கம் குடாநட்டு மக்கள் துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்த போதெல்லாம் ஓடோடிச் சென்று உதவி புரிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் காரியாலயத்தை மங்கள விளக்கேற்றித் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது மீண்டும் ஒரு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் இந்தப் பொதுத் தேர்தல் கடந்த காலத்தைப் போலன்றி ஒரு ஜனநாயகச் சூழலில் நடைபெறவுள்ளதால் மக்கள் தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்ததுடன் கடந்த காலத்தில் தமிழ் தலைமைகள் விட்ட தவறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த ஈ.பி.டி.பி.யின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கடந்த காலத் தலைமைகள் இழைத்த தவறுகளாலும் கிடைத்த சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்தத் தவறியதாலும் தமிழ் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அதனைப் பயன்படுத்துவதற்குத் தமிழ் தலைமைகள் தவறியதால் மக்களுக்குச் சொல்லொணாத் துயரங்கள் ஏற்பட்டதாகவும் யுத்தத்தினால் பல இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இணக்கப்பாடான அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் நியமிக்கப்பட்ட 8 வேட்பாளர்களுக்கும் மக்கள் அனைவரும் வாக்களிக்கும் பட்சத்தில் மக்களுக்குத் தேவையானவற்றைத் தாம் பெற்றுத் தருவோம் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கரம் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இத்திறப்பு விழாவில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்திரி அலென்டின் ஜுட் உதயன் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பூ.குணசிங்கம் மற்றும் ஆசிரியர் சி.சிவரூபன் உட்படப் பலர் உரை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’