
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் 2 ஆயிரத்து 216 பேர் இன்றையதினம் தமது சொந்த இடங்களில் மீள்க்குடியேற்றப்பட்டுள்ளனர்.
மீளக்குடியேற்றப்பட்டவர்கள் வவுனியாவில் உள்ள தமது உறவினர் நண்பர்களின் வீடுகளில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தவர்கள் என்பதுடன் மீளக்குடியேறும் இந்த மக்களுக்கு ஒரு மாதகாலத்திற்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வீடுகளை நிர்மாணித்து கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் மேலும் பல வசதிகள் செய்துகொடுக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளோரைத் தவிர சுமார் 60 ஆயிரம் பேர் மாத்திரமே தற்போது முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’