
இந்தோனேசிய மெரக் துறைமுகத்தில் படகில் தங்கியுள்ள 244 இலங்கை அகதிகளும் தரையிறங்கியதன் பின்னரே அவர்களுக்கான அகதி அந்தஸ்த்து வழங்கல் செயற்பாடுகளை பரீசிலிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயத்தினை அவுஸ்திரேலியா - பிரிஸ்பேன் ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பான விசேட பிரிதிநிதி பீற்றர் வூல்கோட் தெரிவித்துள்ளார். தற்போது படகில் உள்ள 244 பேரும் தரையிறங்க மறுப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் அதில் தங்கியுள்ள இலங்கை குடியேற்றவாசிகள் தொடர்பில் இதுவரை தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் தரையிறங்கும் பட்சத்தில் அவர்கள் நிரந்தரமாக தடுத்து வைக்கப்படலாம் அல்லது மீண்டும் இலங்கைக்கே அனுப்பப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாகவே அவர்கள் தரையிறங்க மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் தரையிறங்கும் வரையில் அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்குவது குறித்த நடவடிக்கை எவையும் மேற்கொள்ள முடியாதிருப்பதாகவும் ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து இந்தோனேசியாவில் தரையிறங்கிய இலங்கை அகதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்று இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் வூல்கோட் தெரிவித்துள்ளார்.
காரணம் ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலிய எல்லைப்பகுதில் வைத்து மீட்கப்பட்ட பின்னர் இந்தோனேசியாவில் தரையிறங்கினர். எனினும் குறித்த 244 பேரும் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டவர்கள். எனவே இந்த பிரச்சினையை இந்தோனேசியாவே பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’