
நாட்டின் நான்கு பிரதான பௌத்த பீடாதிபதிகள் தற்போது உருவாகியிருக்கும் நிச்சயமற்ற நிலையைப் பற்றி விவாதிக்க கண்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி மாநாடு ஒன்றை கூட்டியுள்ளனர் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் அனைத்து புத்த மத பிக்குகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்ல அரச பரிபாலனம் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற தன்மை என்று அவர்கள் குறிப்பிடும் விஷயம் குறித்து விவாதிக்க கண்டி வருமாறு, இந்த நான்கு பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.
இந்த நிச்சயமற்ற நிலை நாட்டின் எதிர்காலத்துக்குப் பேரழிவைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு புத்த பிக்குகள் நெடுங்காலமாகவே பங்களிப்பு செய்துள்ளதாகவும் இந்த கடிதம் குறிப்பிடுகிறது.
கடிதத்தில் மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் தேரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மாநாடு சுதந்திரம் அடைந்த இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொன்றாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’