
அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கே ஈரான் இவ்வாறு பதிலளித்துள்ளது.
ஈராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான படையினரை அனுப்பியது. எனினும் ஈரான் அவ்வாறு செய்யவில்லை என்று ஈரான் ஜனாதிபதி மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார்.
தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’