வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

தனுன திலகரத்னவின் தாயார் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது


ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் தாயார் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு இவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தனுன திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதேவேளை ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு விவகாரங்களில் தனுன திலகரத்ன தொடர்புள்ளதாக சந்தேகித்து, அவரை கைது செய்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தனுன திலகரத்ன தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’