
பாகிஸ்தானிடம் இருந்து 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றது.
அதிலிருந்து இங்கு பல்வேறு குற்றங்களுக்காக 1000 பேருக்கு மேல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 411 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 5 பேர் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ஐவரும் பங்களாதேஷுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த ஷேக்முஜிபுர் ரஹ்மானை கொலை செய்தவர்கள்.
இவர்கள் தவிர, 36 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தூக்கிலிடப்படவில்லை. வேறுவிதங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தகவலை பங்களாதேஷ் சிறைத்துறையின் தலைமை துணை அதிகாரி கோலம் ஹைதர் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’