வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இடதுசாரி விடுதலை முன்னணியில் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போட்டி


கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசா ன்னணி இம்றை பொதுத் தேர்தலில் இடதுசா விடுதலை ன்னணி என்ற பெயல் நாடு ழுவதும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
இம்முன்னணியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக சமல் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இடதுசாரி விடுதலை முன்னணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதோடு அதற்கான பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் வடக்கு, கிழக்கில் போட்டியிடுவார்கள். அத்தோடு தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கவுள்ளோம்.

நாம் என்றும் சிறுபான்மை இன மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளோம். இந்தக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். மக்கள் உரிமைகளைப் பெறவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’