
ஏதிர்வரும் பொதுத் தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த விண்ணப்பக் கால எல்லையை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க இன்று வரையே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லாததால் 26 ஆம் திகதி வரை அதனை நீடிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டமொன்று தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்றது.
சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.
இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வசதி அளிக்கப்பட உள்ளது. இடம்பெயர்ந்தோர் தாம் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் அத்தாட்சியுடன் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உள்ள பிரதேசங்களில் 2008 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ளதோடு, வேட்பு மனுக்களை கையேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’