.jpg)
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் 14வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 7வருட கடுங்காவல் சிறை! // சீக்கியர்களுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா?- இளந்தமிழர் இயக்கம்!
By editor • February 15, 2010
14வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன், 7வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு நவம்பர்மாதம் 2ம் திகதி ,டம்பெற்ற ,ச்சம்பவத்தில் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த 4பிள்ளைகளின் தந்தையாகிய ,ரத்தினசிங்கம் சிவநாதன் என்பவரே நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அவரது மகளாகிய சிறுமிக்கு 30ஆயிரம் ரூபா நஷ்டஈடாக வழங்குவதுடன், தண்டப் பணமாக 10ஆயிரம் செலுத்த வேண்டுமென்றும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ,ந்தப் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியத்தின்மூலம் தெரிவிக்கப்பட்டது. தனது தந்தையார் குடித்துவிட்டு வந்து தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனையின் முன்பு வைத்தியரிடம் தெரிவித்திருந்தார். குற்றச்சம்பவம் ,டம்பெற்றபோது சிறுமி பருவமெய்தியிருந்ததாகவும், வைத்திய பரிசோதனையின்போது சிறுமி பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்ததாகவும் சட்ட வைத்தியஅதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் தனக்கு நேர்ந்ததைத் தெரிவிக்கையில், ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வரும் தனது தந்தையார் தன்மீது பாலியல் குற்றம்புரிந்ததாகவும் ,வ்வாறான குற்றச்செயல் ஒருமாதம் வரையில் ,டம்பெற்றதாகவும், தனது தாயாரையும் தனது சகோதரிகள் மற்றும் சகோதரனையும் அடித்து வெளியில் துரத்திவிட்டு தன்னைப் பயமுறுத்தி, தனிமையில் தன்மீது குற்றம்புரிந்ததாகவும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையைச் சேர்ந்த அதிகாரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ததன் பின்னர் எதிரியைக் கைதுசெய்த பெண் பொலிஸ் அதிகாரி, மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட சட்டவைத்திய அதிகாரி டொக்டர் அஜித் ஜயசேன ஆகியோரின் சாட்சியங்களை அரசதரப்பு சட்டத்தரணி செல்வி. நளினி கந்தசாமி நெறிப்படுத்தினார். விசாரணைகளின் முடிவில் பாதிக்கப்பட்ட சிறுமியின்மீது அவரது தந்தையார் பாரதூரமான பாலியல் குற்றம் புரிந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு ,டமின்றி நிரூபணமாகியிருப்பதாகத் தெரிவித்த வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ.விசுவநாதன், எதிரிக்கு 7வருட கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’