இலங்கையின் 6வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடு முழுவதும் இன்றைய தினம் (26) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களில் மக்களின் வாக்களிப்பைக் கண்டறிவதற்காக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு விஐயம் மேற்கொண்டார். முதலாவதாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கும் அதனைத் தொடர்ந்து வேம்படி மற்றும் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிகளின் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தேர்தல் முகவர்களால் மக்களின் சுமூகமான வாக்களிப்புக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் மக்களின் வாக்களிப்பு நடவடிக்கைகளையும் கவனத்திற்கொண்டார். இதன் பின்னர் கொழும்புத்துறை கிழக்கு அரியாலை இருபாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களுக்கும் கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம் புத்தூர் மெதடிஸ் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலை வட இந்து மகளிர் கல்லூரி கரவெட்டி திரு இருதயக் கல்லூரி வரணி மகாவித்தியாலயம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயம் மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். |
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’