வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 8 ஜனவரி, 2010

யாழ். பெருமாள் கோவில் பகுதியில் பொதுமக்கள் சிரமதானம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

யாழ். பெருமாள் கோவிலையும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தமது பிரதேசத்தில் தன்னார்வ அடிப்படையில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.

யாழ். மாநகர பிரதி முதல்வர் இளங்கோ றீகன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிரமதானப்பணிகளில் டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைகளே பிரதானமாக இடம்பெற்றன. தற்சமயம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயானது வெகுவேகமாக பரவிவரும் நிலையில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் நுளம்புகள் பரவாதவாறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய பொருமாள் கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி சிரமதானப்பணிகளில் குப்பை கூழங்கள் மற்றும் பாவிக்கப்படாத பொருட்கள் யாவும் அகற்றப்பட்டு குட்டைகளில் நீர் தேங்காதவாறும் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய சகல பொருட்களும் அகற்றப்பட்டு எவ்வகையிலும் தண்ணீர் தேங்காதவாறு தன்னார்வ சிரமதானப் பணிகள் இடம்பெற்றன.

சிரமதானப் பணிகள் இடம்பெற்றவேளை அங்கு நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிரமதான பணிகளைப் பார்வையிட்டதுடன் அதில் ஈடுபட்ட பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். மேற்படி சிரமதான பணிகள் ஏனையோருக்கும் ஓர் முன்னுதாரணம் எனத் தெரிவித்த அமைச்சரவர்கள் சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருடன் யாழ். மாநகரசபையும் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்களை முன்னொண்டுசெல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். பிரதி முதல்வருக்கு பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’