வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 ஜனவரி, 2010

இந்திய கடற் பரப்பில் இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது


இந்திய கடலோர காவல் படையினரின் பிரிவுக்குட்பட்ட கடல் பகுதியில், 2 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கண்காணிப்பில் ஈடுபட்ட இந்திய காவல் படையினர் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்களைக் கைது செய்ததுடன், அவர்களது மீன் பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 இலங்கையர்களும் காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காசிமேடு பொலிசார் இது தொடர்பில் வழக்குப் பதிவு செய்து, 12 பேரையும் எழும்பூர் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

புழல் சிறைச்சாலையில் இவர்களை வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’