வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 டிசம்பர், 2009

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெருந்தொகையான பொதுமக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்தார்.

தற்சமயம் ஏ9 தரைப்பாதையானது பொதுமக்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவு குடாநாட்டு மக்கள் தென்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அதேவேளை ஏராளமான தென்பகுதி சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்திற்கு வருகைதர ஆரம்பித்துள்ளனர்.

நேற்றையதினம் ஒரே சமயத்தில் பெருமளவு பஸ்களில் பலநூற்றுக்கணக்கான தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் அம்மக்கள் தங்குவதற்கு பெரும் இடநெருக்கடி ஏற்பட்டது. யாழ். நாகவிஹாரை யாத்திரிகர்கள் மடம் நிரம்பிய நிலையில் தென்பகுதி மக்கள் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கு என்பவற்றில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் அவ்விடங்களுக்கு நேற்றிரவு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மக்களைப் பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார். அதேநேரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்துள்ளார் என்பதை அறிந்துகொண்ட தென்னிலங்கை மக்கள் அவருடன் அளவளாவவும் கைலாகு கொடுக்கவும் முண்டியடித்தனர். ஒரு அமைச்சர் தம்மை சந்தித்து நலம் விசாரிக்க இரவு என்று நேரகாலம் பாராது வருகை தந்ததை அங்கு திரண்டிருந்த பலரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டனர்.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள தென்னிலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் அம்பாந்தோட்டை இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக காணப்பட்டதுடன் அவர்கள் பலரும் நயினாதீவிற்கு யாத்திரை மேற்கொள்ள வந்தவர்களாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’