யாழ். குடாநாட்டில் தொடரும் அடைமழை வெள்ளம் காரணமாக மக்கள் இடப்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள நிலையில் கொட்டும் மழையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றார்.யாழ். மாவட்டத்தில் அடை மழை வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடமராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் இன்று நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கி வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழைகாரணமாக இடம்பெயரத் தொடங்கியுள்ள மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவினை அந்தந்தப்பகுதி இராணுவ முகாம்களிலிருந்து இராணுவத்தினரே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினை அடுத்து பிரதேச செயலார்களினால் அந்தந்தப்பகுதி கிராம உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சமைத்த உணவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சில இடம்பெயர் நிலையங்களில் சமையல் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.
இன்றையதினம் வல்வெட்டித்துறை பருத்தித்துறை மற்றும் வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட பல இடம்பெயர் நிலையங்களுக்குச் சென்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரை வழங்கியதுடன் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த சத்து பிஸ்கட் வகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு தானே நேரடியாக வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பொலிகண்டி மேற்கு செம்மீன் பலநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டபோது

சக்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் தங்கியுள்ளோரை பார்வையிட்டபோது

இன்பர்சிட்டி கிராம அபிவிருத்தி சன சமூக நிலைய பொது நோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளோரை பார்வையிட்டபோது

தெணியம்மன் மண்டபத்தில் தங்கியுள்ள மயிலிட்டி முகாம் மக்களைச் சந்தித்தபோது

பருத்தித்துறை முனை தொம்மையப்பர் தேவாலயத்திற்கு விஜயம் செய்தபோது

தும்பளை உதயசூரியன் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளோரை சந்தித்தபோது

மணல்காடு தேவாலயத்தில் தங்கியுள்ளோரை சந்தித்தபோது

குடத்தனையில் இடம்பெயர்ந்தோரை சந்தித்தபோது

கரவெட்டி ராஜகிராமத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தோரை சந்தித்தபோது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’