வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 நவம்பர், 2009

பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் ஏயார் லைன்ஸ் அறிவிப்பு

பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நிறுவனம் மீண்டும் நிமிர கால அவகாசம் தேவை என்று ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஜப்பான் ஏயார் லைன்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஜப்பானில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது .

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 131.2 பில்லியன் யென் (1.45 பில்லியன் டொலர்) அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது ஜப்பான் ஏயார்லைன்ஸ். கடந்த ஆண்டு இந்த நஷ்டத்தின் அளவு 36.7 பில்லியன் யென்களாக இருந்தது.

இந்த ஆண்டு வருமானமும் கணிசமாகக் குறைந்துவிட்டது. பயணிகள் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சி காணப்படுவதால் வருவாய் சீரடையும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை என ஜப்பான் ஏயார் லைன்ஸின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

இந்த வீழ்ச்சியைச் சரிகட்ட பல்லாயிரம் பணியாளர் குறைப்பு, சிக்கன நடவடிக்கை என பல முயற்சிகள் செய்தும் பலனில்லை என்று கூறப்படுகிறது.

எனவே நிறுவனம் பேரிழப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகப் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதோடு, கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கால அவகாசமும் கேட்டுள்ளது ஜப்பான் ஏயார் லைன்ஸ்.

இப்போதைக்கு சரிவிலிருந்து நிமிர உடனடியாக 125 பில்லியன் யென் தேவை என்றும், இதனை ஜப்பானிய அரசு கொடுத்து உதவ வேண்டும் என்றும் இந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’