வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 நவம்பர், 2009

கொழும்பு வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைச்சர் தேவானந்தா அவர்களுடன் நாடாளுமன்றம் விஜயம்.

நல்லெண்ண விஜயமாக தென்பகுதிக்கு விஜயம் செய்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்ததுடன் அவருடன் நாடாளுமன்றத்திற்கும் விஜயம் செய்தனர்.

தற்போது கொழும்பு வந்தடைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவ தூதுக்குழுவில் அநேகர் தென்பகுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் தடவை என்பதுடன் அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை எனவும் தெரிவித்துள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் நாடாளுமன்றத்தை பார்வையிட்டதுடன் அதன் பாரம்பரியம் மற்றும் நடைமுறைகள் குறித்த விளக்கங்களையும் படைக்கல சேவிதரிடமிருந்து கேட்டறிந்து கொண்டனர்.
நாடாளுமன்ற விஜயத்தின் பின்னராக கொழும்பிலுள்ள சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சிற்கு வருகை தந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அளவளாவியதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்கள். குறிப்பாக யாழ். வளாகத்தில் வைத்து தாம் உரிமையுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த அனைத்து யாழ். வளாக மாணவ மாணவிகளையும் மீண்டும் முழுமையான கல்வி நடவடிக்கைகளில் தம்முடன் இணைத்துக்கொண்டமைக்காக தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’