
கொழும்பு கண்டி தனியார் பஸ் ஒன்றில் வைத்து 16வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் சேஷ்டைக்கு உட்படுத்த எத்தனித்த அதே பஸ்வண்டியின் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் பிரஸ்தாப சந்தேகநபரை பொலிஸார் கண்டி பிரதம மஜிஸ்ரேட் சுமுது பிரேமசந்திர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட வேளையில் நடத்துனர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடவத்தை பிரதேசத்தில் வசிப்பவரான இந்த சந்தேகநபரின் பெயர் சாந்தகீர்த்தி என தெரிவிக்கப்படுகிறது மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரஸ்தாப பாடசாலை மாணவி தனது தந்தையுடனும் சகோதரியுடனும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி தனியார் பஸ்ஸில் பிரயாணம் செய்தவேளையில் பஸ்தரிப்பு நிலையத்தில் இவ்விதம் பாலியல் சேஷ்டைக்கு எத்தனித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தலைமைப் பொலிஸ் நிலைய பிரதம இன்ஸ்பெக்டர் அனுருத்த பண்டாரநாயக்கவின் உத்தரவின் பேரில் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’