
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரத்தை எட்டுவதற்காக சக ஜனநாயகக் கட்சிகளுடன் ஐக்கியப்படுவதற்கான எங்களது கதவுகள் திறந்துதான் இருக்கின்றன. ஆனாலும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் மட்டுமே எமது அரசியலுரிமைகளை
எட்ட முடியும் என்பதை உணர்ந்து தமது மனக்கதவுகளை திறப்பவர்களுடன் மட்டுமே
நாம் கைகுலுக்குவோம் என்று ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகையில் கடந்து போன ஒவ்வொரு காலச்சூழல்களிலிலும் எமது மக்கள் பல்வேறு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பை சந்தித்திருக்கிறார்கள் என்றும் ஆனாலும் கூட்டுச்சேர்ந்தவர்கள் எமது மக்களின் வாக்குகளை மட்டும் தவறான வழிமுறையில் பெற்றுக்கொண்டு தமக்கு கிடைத்திருந்த அரசியல் அதிகாரங்களை எமது மக்கள் மீது அழிவுகளையும் அவலங்களையும் சுமத்துவதற்கே பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் இவ்வாறானவர்கள் இன்று புதியதொரு கூட்டு முயற்சியில் ஈடுபடும் போது தங்களது மனக்கதவுகளை திறந்துதான் சிந்திக்கின்றார்களா என்று எண்ண தோன்றுவதாகவும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கனிந்து வந்த பேச்சுவார்த்தைகளுக்கான சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்தாமல், அமைதிப்பேசு;சுக்களை புலிகளின் தலைமை இடை நடுவில் முறித்துக்கொண்ட போதும், எமது மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அரசியல் தீர்விற்கு விருப்பமின்றி, அழிவு யுத்தம் நடத்தியே தீருவோம் என்று யுத்த முனையை புலிகளின் தலைமை திறந்து விட்டு எமது மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் தள்ளி விடுவதற்கான நடவடிக்கையை தூண்டி விட்டிருந்த போதும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையில் நின்று கிடைக்க முடிந்த தீர்வை பெற்று கொண்டு ஆக்க பூர்வாக முன்னோக்கி நகர்வோம் என்ற உறுதியோடு உழைத்திருந்த ஐனநாயக சக்திகள் பலரும் கொன்று பலியாக்கப்பட்டு தெருத்தெருவாக எறியப்படும் போதும் தங்களது மனக்கதவுகளை திறக்காமல் மௌனம் காத்த சுயலாப அரசியல் தலைமைகள் இன்று தமது மாபெரும் வரலாற்று தவறுகளுக்காக
எமது மக்களிடம் தம்மை சுயவிமர்சனம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கின்றது என தமது அறிக்கையில் தெரிவித்திக்கும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவ்வாறு சுயவிமர்சனம் செய்யப்பட்டு நடைமுறை சாத்தியமான வழிமுறையில் அரசியல் தீர்வு காண்பதற்கும் இணக்கம் காணப்பட்டால் மட்டுமே அவர்களுடனான ஐக்கியம் குறித்து சிந்திக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐக்கியம் குறித்து பேசுவதற்கான தளம் உருவாகுமாயின் இவைகள் குறித்தே பேசுவோம் என்றும் நடந்த தவறுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதென்பது தொடர்ந்தும் எமது மக்களுக்கான அரசியல் தீர்வை பின்தள்ளாமல் இருப்பதற்காகவே என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் சாத்தியமான ஏனைய தமிழ் கட்சிகளுடனான
ஐக்கியம் குறித்து பேசுவோம் என்றும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்புச் செயலாளர்!
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி ஈ.பி.டி.பி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’