
இதில் 41 நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சுமார் ஐநூறு பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் கல்விமான்கள் பொறியியலாளர்கள் வைத்தியர்கள் வழக்கறிஞர்கள் கட்டடக்கலைஞர்கள் புத்திஜீவிகள் முதலீட்டாளர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் அடங்கியுள்ளனர்.
இன்று பகல் புலம்பெயர்ந்த பல்லின மக்களுடனான விசேட சந்திப்பு ஒன்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் விசேட அதிதிகளாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஜீ.எல்.பிரிஸ் அவர்களும் பங்குகொண்டனர். இச்சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தொடரும் எமது தேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் புலம்பெயர்ந்த நீங்களும் பங்கெடுப்பதோடு உங்களது முதலீடுகளை எமது தேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தி அதில் நீங்களும் பயனடைவதோடு எமது தேசத்தையும் கட்டியெழுப்பும் வரலாற்றுக் கடமையிலும் நீங்கள் பங்கெடுக்க முடியும் என வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’