வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 நவம்பர், 2009

மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதி மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்! 12.11.2009 - வியாழக்கிழமை

தென்மராட்சி கிழக்கு ஸ்ரீஞான துர்க்கையம்மன் தேவஸ்தானத்திற்கு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று விஜயம் செய்து வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் துர்க்கையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு மீள்குடியேறியுள்ள மக்களுடன் கலந்துரையாடினார். கடந்த 2006ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அமைச்சர் இன்றைய தினம் அப்பகுதிக்கு விஜயம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

ஆலயப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சரை வரவேற்ற அப்பகுதி மக்கள் மலர் மாலை அணிவித்து மிகுந்த குதூகலத்துடன் வரவேற்ற அதேசமயம் அந்த ஆலயத்தின் தர்மகர்த்தாவான சி.நவரத்னமுகுந்தன் குருக்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அங்கு சமூகமளித்திருந்த மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைப் பெற்றுக் கொண்டதுடன் மீண்டும் அப்பகுதிக்கு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’