இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணிமுதல் இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி பிரசுரிக்கும் காலை 7 மணிவரையில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது, இதற்கு பிரதான காரணம் களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இந்தநிலையில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் இரண்டு மணித்தியாலங்களாவது செல்லும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதேவேளை மஸ்கெலிய விமலசுரெந்திர மின்னுற்பத்தி விநியோக சேவை நிலையத்தின் தகவலின்படி, அங்கிருந்து மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் பிரதான சுவிட்சுகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பெருமளவான பணிகள் முடங்கிப்போயுள்ளன.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’