
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் - செல்வராஜா பத்மநாதன் என்கிற கேபியை இந்தியா விசாரிக்க இப்போதைக்கு அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
"கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி கைது கேபி செய்யப்பட்டார். அவரிடம் இலங்கை அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைகள் முடிவடைந்து, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் அவரை விசாரிக்க அனுமதிப்பதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கேபிதான் நிதி உதவி வழங்கினார், ஆயுதங்களை வாங்கி அளித்தார் என்று இந்தியா கருதுகிறது. இது தொடர்பாக கேபியிடம் விசாரணை நடத்தினால் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்றும் அது நம்புகிறது.
கேபியை விசாரிக்க ஏற்கனவே இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது இந்தியா. கேபியை விசாரிக்க சிபிஐ குழுவும் கூட தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் கேபியை இப்போதைக்கு யாரிடமும் காட்டுவதற்கோ அவரை விசாரிக்கவோ அனுமதிப்பதாக இல்லை என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசு கொண்டிருப்பதாகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’