சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் வீதி நாடகப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இணையத் தளச் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வெறு கிராமங்களிலும் இந்த வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளதாகவும், அவுஸ்திரேலிய அரசாங்கம் இதற்கு அனுசரணை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விளம்பர நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த வீதி நாடகப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவில் பிரவேசிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதனை இந்த வீதி நாடகங்கள் எடுத்தியம்ப உள்ளன.
உள்நாட்டு கலைஞர்களே இந்த வீதி நாடகங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் துண்டுப் பிரசுரங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’