வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 அக்டோபர், 2009

யாழ். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலை நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது!


யாழ். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலை நிகழ்வும் இன்று நடைபெற்ற சமயம் அதில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டனர்.

இன்று காலை கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வடமாகாண ஆளுனர் சந்திரசிறி மாகாணக் கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

முதலில் முன்பள்ளிச் சிறுவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பிரதம விருந்தினர்கள் இருவரும் ஆரம்பித்து வைத்ததுடன் கண்காட்சி கூடங்களைச் சுற்றிப் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது. வடமாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது பல்வேறு முன்பள்ளி மாணவர்களால் நடனம் நாடகம் மற்றும் கிராமிய நடனம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்த இக்கண்காட்சியிலும் கலை நிகழ்வுகளிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரை நிகழ்த்தும் போது இன்றைய கண்காட்சி மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் சிறுவர்களது ஆற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் இக்கண்காட்சி அமைந்துள்ளதாகவும் வரும் காலச் சந்ததியினரான முன்பள்ளிச் சிறுவர்களின் முன்னேற்றத்திற்கான சகல வகையான ஒத்தாசைகளை வடமாகாண ஆளுனரும் மாகாணக் கல்வியமைச்சும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர வேலை போதியளவு ஊதியம் என்பவற்றை உறுதிப்படுத்தும் பொருட்டு ஆளுனரும் மாகாண அமைச்சின் உயரதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் மத்திய அரசின் சார்பில் முன்பள்ளிகளுக்குத தேவையான சகல உதவிகளையும் பெற்றுத் தருவதில் முன்னின்று செயற்படுவேன் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்பள்ளிச் சிறார்களின் கல்வி வளர்ச்சி தான் இழந்து போயுள்ள எமது பிரதேசத்தின் கல்வியை மீண்டும் தூக்கிநிறுத்துவதற்கு உதவும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.வேதநாயகம் உட்படப் பலர் உரை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’