வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 அக்டோபர், 2009

கல்கிஸ்ஸ கடல் சீற்றம்!. மூவரைக் காணவில்லை! ஒருவர் பலி!!


கல்கிஸ்ஸ கடற்பிரதேசத்தில் குளிக்கச் சென்றவேளையில் கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காப்பாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த மூவரில் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றுமட்டும் கல்கிஸ்ஸ கடற்பகுதியில் மொத்தம் 13 பேர் அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டனர். மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் மூவரைக் காணவில்லையென்றும் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’