வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 அக்டோபர், 2009

கிணற்றுள் வீழ்ந்த யானைக் குடும்பம் மீட்பு.


விவசாய நடவடிக்கைக்காக வெட்டப்பட்டிருந்த தற்காலிக கிணற்றுள் வீழ்ந்த யானைக் குடும்பமொன்று பிரதேச வாசிகளின் துணையுடன் மீட்கப்பட்டது.

நாட்டின் சிலபாகங்களில் நிலவும் வரட்சி காரணமாக நீர் தேடி கிராமங்களுக்குள் யானைகள் வருவது வழக்கம். இவ்வாறு சோமாவதிய தேசிய பூங்காவிலிருந்து அயல் கிராமமொன்றுக்குள் நுழைந்த யானைக் குடும்பமொன்று விவசாய நடவடிக்கைக்காக வெட்டப்பட்டிருந்த தற்காலிக கிணற்றினுள் வீழ்ந்தன.
குட்டி யானை நீருள் மூழ்காமலிருக்க தாயும் தந்தையும் அரும் பாடுபட்டன. கிராமவாசிகளின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் இந்த யானைக் குடும்பம் கிணற்றிலிருந்து வெளிவர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’