வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 அக்டோபர், 2009

இலங்கை துணைத் தூதர் உருவ பொம்மையை தூக்கிலிட முயற்சி : 7 பேர் கைது


இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின் உருவ பொம்மையை தூக்கிலிட முயற்சி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கைப் பிரச்னை தொடர்பாக, அந் நாட்டு துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இலங்கை முள்வேலி முகாம்களில் வாழும் தமிழர்களை அடிக்கடி வந்து பார்ப்பதற்கு அது என விலங்கியல் பூங்காவா என்று கேட்டார்.

துணைத் தூதரின் பேச்சைக் கண்டித்தும், அவரை உடனடியாக இந்தியாவைவிட்டு வெளியேறக் கோரியும் தமிழ் ஆர்வர்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதற்கு போலீஸார் தடை வதித்தனர்.

ஆனால், தடையை மீறி ஈழ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் கொண்டு வந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உருவ பொம்மையை தூக்கிலிட முயன்றனர்.

ஆனால் அவர்களைத் தடுத்த போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’