-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
அங்குலான இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 9 பொலிசார் விளக்கமறியலில்
அங்குலான பிரதேசத்தில் தடுப்புக் காவலில் இருந்த இரண்டு இளைஞர்களின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 9 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதிபதி இந்திகா கலிங்கவன்ச உத்தரவிட்டுள்ளார்.21 வயதுடைய தனுஸ்க உதய சாந்த மற்றும் அபோன்ஸ் ஆகியோர் மொரட்டுவ பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர்.அவர்கள் ரைபிள் துப்பாக்கி கொண்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மவுன்ட் லாவின்யா நீதிவான் ஹர்சா சேதுங்க தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இந்த கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மவுன்ட்லாவின்யா மற்றும் மொரட்டுவ ஆகிய இரண்டு நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த கொலைகள் தொடர்பில், முன்னாள் அங்குலான பொலிஸ் பொறுப்பதிகாரி பி. டீ . நியுடன் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்து விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’