கேரளாவின் கடலோரப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.கேரளக் கடலோரப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவக்கூடும் என்று கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் புலனாய்வுத் தகவல்களை காரணம் காட்டியே இவ்வாறான தேடுதல் வேட்டைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.குறிப்பாக கோவளம் - விழிஞ்சம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கேரள காவல்துறையினரால் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு, கடலோர விடுதிகள் தோறும் பெருமெடுப்பில் தேடுதல் வேட்டைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதே கடலோரப் பகுதிகளை அண்டி தமது கடல்ரோந்துகளையும் இந்திய கடலோரக் காவற்படையினர் முடுக்கிவிட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’