வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ராஜீவ் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜீவ் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 செப்டம்பர், 2011

ராஜீவ் கொலை வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிடுமாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தல்

ரா ஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கருணையளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இம்மூவரையும் தூக்கிலிட வேண்டும் என ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் கூறியுள்ளனர்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ராஜீவ் காந்தி பிறந்த தினம்: தமிழக ஆளுனர் அஞ்சலி

றைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை ராஜ் பவனில் அவரது படத்துக்கு ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று மலரஞ்சலி செலுத்தினார்

சனி, 28 நவம்பர், 2009

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தாக்கலாகவில்லை - ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஒத்திவைப்பு


சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் இறப்புச் சான்றிதழ்களை சிபிஐ தாக்கல் செய்யாததால், ராஜீவ் காந்தி கொலை [^] வழக்கு [^] விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார். இந்த வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதேபோல பொட்டு அம்மான், நளினி, முருகன், அகிலா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் வழக்கிலிருந்து பிரிக்கப்பட்டு தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தனி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 17 வருடங்களாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலாவது கோர்ட் நீதிபதி ராமலிங்கம் விடுமுறையில் இருப்பதால், 6வது கோர்ட் நீதிபதி ஆனந்தகுமாரின் அறையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது சிபிஐ சார்பில் ஒரு கவர் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை பிப்ரவரி 3ம் வாரத்திற்குத் தள்ளி வைத்தார் நீதிபதி ஆனந்தகுமார்.

கடந்த மே மாதம் முடிந்த ஈழப் போரின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து வழக்கை முடிக்க இறப்புச் சான்றிதழ் தருமாறு இலங்கை அரசுக்கு இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால் இதுகுறித்து இலங்கை அரசிடமிருந்து பதில் ஏதும் இல்லை.

மேலும், பொட்டு அம்மானும் நிச்சயம் இறந்து விட்டார், ஆனால் உடல் மட்டும் கிடைக்கவில்லை என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது. இந்த இருவரும் இறந்து விட்டதாக இலங்கை அரசு கூறி வருகின்ற போதிலும், இறப்புச் சான்றிதழ்களைத் தராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.