வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 பிப்ரவரி, 2010

கலைஞர் ஸ்ரீதருக்கு கலையுலகம் திரண்டுவந்து அஞ்சலி


'பல்கலைத் தென்றல்' கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடலுக்கு சகல துறைகளையும் சேர்ந்த கலையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

நாடகம், கவிதை, ஓவியம், பாடல், இசையமைப்பு என பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய ஸ்ரீதர் பிச்சையப்பா கடந்த சனிக்கிழமை காலமானார்.

ஸ்ரீதரின் இல்லத்திலிருந்து இன்றுகாலை எடுத்துவரப்பட்ட பூதவுடல் கலைஞர்களின் அஞ்சலிக்காக கொழும்பு 7 இல் அமைந்துள்ள கலாபவனத்தில் வைக்கப்பட்டது.

இலங்கையின் திரைத்துறையைச் சார்ந்தவர்கள், அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நாடகக் கலைஞர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் என கலைத் துறையைச் சார்ந்த நூற்றுக்கணக்கானோர் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சனி, 20 பிப்ரவரி, 2010

பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்


இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47.

இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா. சிறு வயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர்.

பிரபல நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், 'மிமிக்ரி', மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா.