
இன்று காலை 6.30, மணியளவில் பாங்காக் தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை கைது செய்யும் பொருட்டு குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தினால் பாங்காக் தாய்லாந்தில் 45 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழ்கள் இதில் 16 வயதுக்கு உட்பட்டோர் 15,ஏனையவர்கள் 25 ஆண்கலும் பெண்கலும் அடங்கும் பாங்கொக்கில் உள்ள {unhcr} அகதிகல் பனிமனையில் பதிவு செய்யப்பட்டவர்கள் இதில் பொரும்பாலானவர்கள் அகதிகள் என அங்கிகரிக்கப்பட்டவர்கள் சுமார் 4 வருடங்கலாக அகதியகலாக பாங்காக் தாய்லாந்தில் தங்கி இருப்பவர்கள் என்பதும் குரிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முட்பட்ட 260 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது. கைதை . அடுத்து கனடாவின் மேற்கு கரையோரப் பகுதியில் மர்மக் கப்பல் ஒன்றுடன் கடந்த வார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியாத நிலையில் அது பாங்காக்கிலிருந்து செயல் படும் சட்ட விரோத முகவர்களால் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இணைய தலங்களில் வந்த செய்திகளை அடுத்து பாங்காக் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தினால் பாங்காக்கில் கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமே இந்தக் கைது என்றும் கூரப்படுகிறது .