வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திருமாவளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமாவளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜூலை, 2010

இலங்கை தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தினரை அப்புறப்படுத்த வேண்டும் திருமாவளவன்

திட்டக்குடி வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதன், 4 நவம்பர், 2009

இலங்கை கடற்படையைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் : திருமாவளவன்


இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்தியக் கடலில் ஓரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை இலங்கைக் கடற்படையினர் சுற்றி வளைத்துக் கடத்தி சென்றுள்ளனர்.

சர்வதேச எல்லையைத்தாண்டி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களின் வலைகளை இவர்கள் அறுத்துச் சேதப்படுத்தியுள்ளனர். பிடித்து வைத்துள்ள மீன்களையும் அவர்தம் 5 படகுகளையும் கைப்பற்றியதுடன் மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.

இலங்கைக் கடற்படையின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கதையாக நீடித்து வருகின்றன. இந்திய மத்திய ஆட்சியாளர்கள் அவர்களோடு கூடிக் குலாவுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1983 இலிருந்து தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படை நடத்தி வரும் துப்பாக்கி சூடு மற்றும் கைது நடவடிக்கைகளை இந்திய அரசு ஒரு முறைகூடக் கண்டித்ததே இல்லை.

தமிழக மீனவர்களையும் அவர்தம் மீன் பிடிக்கும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் துளியளவில் முனைப்புக்காட்டிய தேயில்லை.

தற்போதும் அதே மெத்தனமான போக்கையே இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடத்தப்பட்டு 2 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை இல்லாவிட்டாலும் இந்திய இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவாவது இந்திய ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இந்திய கடல் எல்லைக்குள் இலங்கைப் படை அத்துமீறி நுழைவதை இந்திய அரசு ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?

இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. கடத்தப்பட்ட 18 மீனவர் களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் எமது கட்சி வற்புறுத்துகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சமூக தலைவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் விடுதலைச்சிறுத்தைகள் முன்னின்று மாபெரும் போராட்டத்தை நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

பிரபாகரனுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன்


"நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந்திருப்பார்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் கூறியிருக்கின்றார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த சமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனிமொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார்.

"இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூற, அதை சிரித்தபடி செவிமடுத்துக் கொண்டிருந்தார் திருமாவளவன்